வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
காரைக்குடியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது.;
காரைக்குடி,
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இரவில் தொடங்கிய பனி மறுநாள் காலை 8 மணி வரை காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கடும் பனியால் பொதுமக்களுக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மேலும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்களும் பரவி வருகிறது. கடும் பனியால் பலரும் சளி, இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர்.