ஏரிமலை வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டிய 3 பேருக்கு அபராதம்
ஏரிமலை வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டிய 3 பேருக்கு அபராதம்;
சேர்வராயன் வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள ஏரிமலை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தேக்கு மரங்கள் வெட்டுவதாக வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.அப்போது அங்கு தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வீராட்சியூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூமராத்தூரை சேர்ந்த தனக்கோடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட தேக்கு மரத்துண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பழனிவேல் உள்பட 3 பேருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சேலம் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் உத்தரவிட்டார்.