எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் வெயிலின் தாக்கத்தால் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தால் சில மரங்கள் கருகின. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்றும், மலைப்பகுதியில் குப்பைகளை வீசக்கூடாது என்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.