தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
அரக்கோணத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.;
அரக்கோணம்
அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் அரக்கோணம் ரெயில்வே என்ஜினியரிங் பணிமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
அப்போது திடீரென தீ பிடித்தால் எப்படி அணைப்பது, தீ பரவாமல் தடுப்பது, பாதுகாப்பாக பணி செய்வது, பணியின்போது விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது,
பிறரை காப்பாற்றுவது, தீ காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை முறைகள் செய்வது என்பன குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
இதில் பணிமனை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.