டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-31 04:16 GMT

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 8.30 மணிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்