காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் குளிக்க தடை- பரிகாரம் செய்யவும் அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் குளிக்க தடை- பரிகாரம் செய்யவும் அனுமதி இல்லை;

Update:2022-10-19 02:06 IST

பவானி

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பவானியில் நேதாஜி நகர், காவிரி வீதி, காவேரி நகர், பசுவேஸ்வரர் வீதி, தினசரி மார்க்கெட், கீரைக்கார வீதி, மற்றும் பவானி பாலக்கரை ஆகிய தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பவானி கூடுதுறை காவிரியில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பவானி கூடுதுைறை பரிகார மண்டபங்களில் பரிகாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பவானி பழைய பாலத்தில் செல்லவும் போலீசார் தடைவிதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்