மாநில அளவிலான கேரம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2022-11-05 00:07 IST

கரூர் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி கரூரில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ச.மகாலட்சுமி, 8-ம் வகுப்பு மாணவி ம.ஹர்ஷினிபிரியா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவிகளுக்கு குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், உதவி தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வியாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்