சிறுமிக்கு கட்டாய திருமணம்வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதி்வு செய்யப்பட்டது.

Update: 2023-07-09 18:52 GMT

ராமநத்தம், 

வேப்பூர் அருகே மதுரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த நல்லூர் ஒன்றிய விரிவாக்க அலுவலர் கலைவாணி வேப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிகண்டன் மற்றும் சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்