ஆட்டோவில் வலம் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் ஆட்டோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர்.

Update: 2023-04-10 19:00 GMT

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க். இவரது பெண் நண்பரான தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பிராய். இவர்கள் 2 பேரும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கள் நாட்டில் இருந்து இந்தியா வந்தனர். பின்னர் இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றி பார்க்க முடிவு செய்து, டெல்லியில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று காலை இவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து ஆட்டோவில் கொடைக்கானலுக்கு வந்தனர். பின்னர் சுற்றுலா இடங்களான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர் ராக்ஸ், நட்சத்திர ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். அவர்கள் வந்த ஆட்டோ மீது ஓவியங்கள் வரையப்பட்டு மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டது. அந்த ஆட்டோவை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்காட்லாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ளோம். இந்தியா மிகவும் நல்ல நாடு. பாதுகாப்பு உள்ளதாக இருக்கிறது. நாங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சுற்றி பார்த்த பின்னர் கொடைக்கானலுக்கு வந்துள்ளோம். இங்குள்ள பருவநிலை, ஸ்காட்லாந்து நாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாளை (இன்று) பழனியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளோம். அதன்பின்பு அங்கிருந்து சிக்கிம் மாநிலம் செல்ல இருக்கிறோம். இந்தியாவில் சுற்றுப்பயணம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்