இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-26 04:33 GMT

சென்னை,

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி உள்ள ரிஷி சுனக்கிற்கு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியா - பிரிட்டன் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். நான் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். என அவர் தெரிவித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்