போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு;

Update:2023-06-13 15:40 IST

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர். அந்த மனுவில், 'அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. கருங்காளிபாளையத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு நடந்தது. அதே கிராமத்தில் மளிகை கடை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பணம், மளிகை பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.

இதுகுறித்து புகார் தெரிவித்தால் மனு ஏற்பு ரசீது மட்டும் கொடுத்து, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் உள்ளனர். குற்ற வழக்குகளுக்கு உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், திருடர்களை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்