பழனியில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

பழனியில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-13 15:37 GMT

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியம்மாபட்டி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, பெரியம்மாபட்டி பகுதியில் உள்ள அரசு உபரி நிலங்கள், நீரோடை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உபரி நிலங்களை மீட்டு ஏழை மக்களுக்கு வழங்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் பெரியம்மாபட்டி பகுதி விவசாயிகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்