பயணிகள் நிழற்கூடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூரில் பயணிகள் நிழற்கூடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;

Update:2023-09-12 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்ட செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்