ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 346 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 346 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update:2022-08-17 23:55 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, 237 மாணவர்கள், 109 மாணவிகள் என 346 பேருக்கு இலவச சைக்கிள்களை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்