பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

சாலைப்புதூர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update:2023-08-06 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கி, 171 மாணவ-மாணவிகளுககு இலவச சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தாளாளர் இஸ்ரவேல் தர்மராஜ், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், பேய்க்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரமேஷ்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர் சிவபெருமாள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்