பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update:2022-09-16 01:15 IST

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு ஒன்றியம் இடையன்குளம் பஞ்சாயத்தில் உள்ள அமீர் ஜமால் மேல்நிலைப்பள்ளி, திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை வடக்கு, தெற்கு வட்டார தலைவர்கள் கனகராஜ், நளன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு நகராட்சி தலைவர் ஜார்ஜ்வில்சன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்