வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி நடக்கிறது.

Update: 2022-07-19 15:48 GMT

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி திருப்பத்துர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 28-ந் தேதி முதல் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ள திருப்பத்துர் மாவட்டத்தை சேர்ந்த படித்த ஆண் மற்றும் பெண் வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்