பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி

உலக முட்டை தினத்தையொட்டி நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-10-14 00:15 IST

உலக முட்டை தினத்தையொட்டி தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல்லில் 10 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் துணைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜன் மற்றும் பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக சங்க வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு தலா 2 முட்டைகள் வீதம் வேக வைத்த முட்டைகளை சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். அதைத்தொடர்ந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் சசிக்குமார், இயக்குனர்கள் ஆர்.எஸ்.ஆர்.துரை, பிரபு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்