இலவச கண் சிகிச்சை முகாம்

அரக்கோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 14:17 GMT


அரக்கோணம் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் சி.எஸ்.ஐ. சென்டரல் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் கே.சதீஷ் மற்றும் ரோட்டரி சங்க துணை ஆளுநரும், மேஜர் டோனருமான மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் பி.இளங்கோ ஆகியோர் தலைமை தாங்கினர். ரோட்டரி சங்க செயலாளர் ஆர்.பி.ராஜா, பொருளாளர் மான்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கண்ணில் புரை, கண்ணீர் பை அடைப்பு, மாலைக் கண், கண்ணில் சதை வளர்ச்சி, கிட்டப்பார்வை தூரப்பார்வை, நீர் அழத்தம் மற்றும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு 64 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கண்புரை உள்ள 16 பேர் இலவசமாக கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆலோசகர்கள் ஜி.மணி, பி.சந்துரு, நிர்வாகிகள் கே.பிரபாகரன், டி.கமலகண்ணன், சிவசுப்பிரமணிய ராஜா, எஸ்.செந்தில்குமார், ஒய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் எஸ்.வெங்கடேசன், மனோகர் பிரபு, குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்