இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

Update: 2023-08-07 21:52 GMT


இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

சர்க்கரை ஆலை

திருச்சுழி தாலுகா மிதவைகுளம் பகுதி கரும்பு சாகுபடியாளர் உரிமைகள் நலச்சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தற்போது உள்ள நிலையில் சாகுபடி செய்யும் கரும்பினை தொலைதூரத்தில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கும் வரையில் சிவகங்கை படமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பினை அனுப்பி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா

விருதுநகர் பெரிய பேராலி பஞ்சாயத்து 1-வது வார்டு கவுன்சிலர் கருப்பசாமி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், தனது வார்டு பகுதியான சின்ன பேராலி பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யாமல் புறக்கணிப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்ைக விடுத்துள்ளார்.

சாத்தூர் தாலுகா ரெங்கப்பநாயக்கன்பட்டி காலனியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் 200 பேர் தாங்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருவதாகவும், தங்களுக்கு சொந்த வீடு நிலம் இல்லாத நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

மாணவிகள் மனு

விருதுநகர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை தொந்தரவு செய்யும் 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீஸ்நிலையத்திலும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்