பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.;

Update:2023-08-15 06:01 IST

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பொங்கி அண்ணன் தலைமையில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்