பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை
சகாதேவசித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை நடந்தது.;
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சகாதேவ சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து, பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கருவறையில் பெண்கள் புனித நீர், வெற்றிலை, பூக்கள், நாணயம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.