மோகனூர்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் விலங்கியல் மன்ற நிறைவு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன் முன்னிலை வகித்தார். தாவரவியல் துறை இணை பேராசிரியர் வசந்தாமணி வாழ்த்துரை வழங்கினார். இளங்கலை இறுதியாண்டு மாணவர் சரண் வரவேற்றார். துறை நிகழ்வுகள் பற்றி இளங்கலை இறுதியாண்டு மாணவி குணவதி பேசினார். நிகழ்ச்சியை முதுநிலை முதலாம் ஆண்டு மாணவி தவஸ்ரீ தொகுத்து வழங்கினார். முதுநிலை இறுதியாண்டு மாணவர்வல்லரசு விருந்தினரைஅறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து பட்டுப்புழு வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன், பட்டுப்புழு வளர்ப்பு பற்றியும், அதை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். விழாவில் துறை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இளங்கலை 2-ம் ஆண்டு மாணவி கவிதா நன்றி கூறினார்.