விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
பாணாவரம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.;
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவிக்கும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
அப்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒலி பெருக்கி பயன்படுத்த போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும். சிலைகள் வைக்கும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது. விநாயகர் சிலைகள் எளிதில் நீரில் கரையக்கூடிய களி மண்ணால் செய்யவேண்டும். அதன் மீது ரசாயனம் தடவக்கூடாது. மற்ற மதத்தினரை இழிவுபடுத்தும் கோஷங்கள் ஏதும் இடம் பெறக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகள் பயன்படுத்தமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.