விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கலவை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-09-09 16:51 IST

கலவை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் காண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. கலவை பகுதியில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வைக்க வேண்டும் என்றும், அனைத்து சிலைகளையும் ஒரே இடத்தில் கரைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்