அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update:2023-09-23 18:30 IST

அணைக்கட்டை அடுத்த சின்னஊணை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. கரக ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அதே கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சின்னஊணை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் பாபு என்கிற யோகநாதன் (வயது 38), பாலகணேசன் (27) ஆகியோரை அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் கைது வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான யோகநாதன், பாலகணேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையில் நகலை போலீசார் வேலூர் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்