ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update:2023-03-22 00:15 IST


குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சென்னை கூடுதல் டி.ஜி.பி. அருண், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் கடந்த 4-ந் தேதி கோவை உக்கடம் ஜி.எம். நகரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு மினி டெம்போவேனில் கேரளாவிற்கு கடத்துவதற்காக 50 மூட்டைகளில் 2¼ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார், கேரளாவிற்கு கடத்த முயன்ற போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த வியாபாரி நிஜாம் என்ற நிஜாமூதீனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பரிந்துரையின் படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரேஷன் அரிசி கடத்தல் வியாபாரி நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதற் கான ஆணையை கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனி டம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்