வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.;

Update:2023-10-16 00:30 IST

களக்காடு:

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரரான களக்காடு போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்