மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
களமருதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, சுப்பிரமணியன், செந்தில், அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை கலந்து கொண்டு புத்தநந்தலில் உள்ளஅணையை சீரமைக்க வேண்டும், வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் சுரேஷ், குணசேகர், ஜோதிராமன், தங்கமணி, சுப்பிரமணி, ராஜி, மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.