அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.;

Update:2023-07-15 00:03 IST

புகழூர் நகராட்சி காந்தியார் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பாட்டு, எழுத்து, பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி வரவேற்று பேசினார். புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்