இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தந்தையும், தம்பியும் அடுத்தடுத்து இறந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-01 00:15 IST

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி சுமதி (வயது 28). இந்த நிலையில் சுமதியின் தந்தையான நரிப்பாளையத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். அதனை தொடர்ந்து சுமதியின் தம்பியான வெங்கடேசன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்தார்.

இதையடுத்து சுமதி தனது தாய் பூங்காவனத்துக்கு ஆதரவாக கடந்த 2 மாதங்களாக நரிப்பாளையத்தில் வசித்து வந்தார். தந்தையும், தம்பியும் அடுத்தடுத்து இறந்ததால் சுமதி மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் திடீரென சுமதி தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல்சிகி்ச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்