மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு

ஏர்வாடியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் இறந்தார்.;

Update:2023-08-03 01:35 IST

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வளர்மதி (வயது 23). நேற்று வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அவரது தாயார் சிவன்பாண்டி மனைவி ஆவுடைதங்கம் (47) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்