வளைபந்து போட்டியில் மாணவிகள் சாதனை

வளைபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.;

Update:2023-08-30 00:15 IST

கடையம்:

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே குறுவட்ட அளவிலான வளைபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜனனி, ரோஷினி ஆகியோர் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் அந்தோணி பாபு, முதல்வர் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள், உடற்கல்வி ஆசிரியர் விஷ்ணு பிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்