விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள் - திருச்சி வேலுசாமி பேட்டி

கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என திருச்சி வேலுசாமி கூறியுள்ளார்.;

Update:2025-12-26 19:47 IST

திருச்சி,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் உள்ள நிலையில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கட்சி தொடங்கிய பின்னர் முதல் தேர்தலை சந்திக்கும் விஜய்யின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அமைக்கும் - கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது - தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.

இது தொடர்பாக வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

செல்வாக்கு அருமனையில் நடை பெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்ச ரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.

காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநி தித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும். என தொண்டர்கள் நினைக் கிறார்கள்.

எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும். வேலையை த்தான் தி.மு.க. செய்தது.

நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர்தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இதுபோன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடு்க்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.

ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டு மொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதா கத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

மேலும் செய்திகள்