ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு செய்யப்பட்டது.;

Update:2023-03-14 19:35 IST

திருவெறும்பூரில் உள்ள திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதும் மட்டுமின்றி விபத்தும் நடந்து வருகிறது. விபத்தில் சிக்கி பலர் இறந்துள்ளனர். ெஹல்மெட் அணியாமல் வந்தவர்களே அதிக அளவில் விபத்தில் சிக்கி உள்ளனர். இதனையடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் நூதன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான திருவெறும்பூர் பஸ் நிலையம், காட்டூர் அம்மன் நகர் கிராசிங், மஞ்சதிடல் பாலம் பகுதி, காட்டூர் கடைவீதி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி துண்டுபிரசரம் வினியோகித்தனர். தொடர்ந்து சாலை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தினர். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்