நாமக்கல்லில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Update:2022-10-23 00:15 IST

நாமக்கல்:

நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை தோறும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் ஆட்டுச்சந்தையும் கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். நாளை (திங்கட்கிழமை) தீபாவளி என்பதால் இந்த சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. கடந்த வாரத்தை காட்டிலும் விலை அதிகமாக இருந்ததாகவும், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்