காருக்கு திருஷ்டி சுத்தி போட்டது குத்தமா? - எலுமிச்சையால் வெடித்த மோதல்
அவர்கள் சண்டையிட்டு கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.;
கோவை ,
கோவை மாவட்டம், காரமடை அருகே புதிய காருக்கு திருஷ்டி கழித்த விவகாரத்தில், இரு வீட்டார் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பில் முடிந்துள்ளது. காரமடை அருகே புதிய கார் வாங்கிய ஒரு குடும்பத்தினர், எலுமிச்சை பழத்தை சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர்.
அப்போது திருஷ்டி கழித்த எலுமிச்சை பழத்தை அவர்கள் பக்கத்து வீட்டின் அருகே வீசியதாக தெரிகிறது. இதுகுறித்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்துள்ளது.
அவர்கள் சண்டையிட்டு கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளன.