"பராசக்தி படம் அதிமுகவுக்கு புரோமோஷன்..."- பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்
அண்ணா என்றாலே அதிமுகதான் என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
பராசக்தி படம் அதிமுகவின் கருத்திற்கு வலு சேர்த்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
’’அண்ணா என்றாலே அதிமுகதான். பராசக்தி படத்தில் அண்ணாதான் ஹீரோ. தமிழகத்தில் அண்ணாவை பற்றி பேசினாலே அது அதிமுக என்றுதான் அர்த்தம்.
பராசக்தி படத்தில் அண்ணாவை பற்றி பெருமையாக பேசி அதிமுகவின் கருத்திற்கு வலு சேர்த்தது மட்டுமில்லாமல், இந்திரா காந்தி பண்ண கொடுமைகளை காட்டி இருப்பதாக அறிந்தேன். நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆகையால் தற்போது திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்றார்.