மளிகைக்கடையில் தங்க மோதிரம்-பணம் திருட்டு

மளிகைக்கடையில் தங்க மோதிரம்-பணம் திருட்டுபோனது.;

Update:2023-04-14 01:13 IST

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த சித்தானத்தம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 29). இவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்த பின்னர் இவர் கடையை பூட்டி விட்டு சென்றார். இதையடுத்து கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் ரூ.4,500-ஐ திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்