தவறுதலாக சுட்ட ‘ஏர் கன்’ துப்பாக்கி - இளைஞர் படுகாயம்

காயமடைந்த தவுபிக்கை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.;

Update:2025-12-05 20:11 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ராயல் பள்ளி தெருவை சேர்ந்த நண்பர்களான தவ்பிக் மற்றும் முஸ்தபா ஆகியோர் பழைய ‘ஏர் கன்’ துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி தவறுதலாக சுட்டு, இளைஞர் தவுபிக்கின் தொண்டையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த தவுபிக்கை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் தவுபிக் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்