மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update:2025-12-05 20:12 IST

தூத்துக்குடி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்