தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் பண்டாரம்பட்டி-சில்வர்புரம் சாலையில் பால் வியாபாரி ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.;

Update:2025-12-05 19:45 IST

தூத்துக்குடி அண்ணாநகர் 8வது தெருவைச் சேர்ந்த பூபால் மகன் சேகர் (வயது 58), பால் வியாபாரி. இவர் கடந்த 29ம் தேதி இரவு 9 மணியளவில் மீளவிட்டான் அருகே பண்டாரம்பட்டி-சில்வர்புரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சேகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்