5 பவுன் நகை திருட்டு

அரிசி கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம மனிதா்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2022-07-19 01:04 IST

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை கரிக்காடு ரெயில் நிலைய தெருவை சேர்ந்தவர் கர்ணன்(வயது50). இவர் அரிசி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கர்ணன் வீட்டை பூட்டி விட்டு செங்கல்பட்டில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை அவருடைய வீட்டின் கொல்லைப்புற கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டில் உள்ள கர்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து கர்ணனின் சித்தப்பா வீரப்பிரகாசம் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மா்ம நபர்கள் வீட்டின் கொல்லைப்புற கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்