புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது.;
கறம்பக்குடி அருகே உள்ள குழந்திரான்பட்டு, ராங்கியன்விடுதி ஊராட்சி பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லாதது குறித்தும் இதனால் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் சிரமப்படுவது குறித்தும் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து கறம்பக்குடியில் இருந்து குழந்திரான்பட்டு-ராங்கியன்விடுதி வழியாக பட்டுக்கோட்டைக்கு இன்று முதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. கறம்பக்குடி பஸ் நிலையத்தில் நடந்த விழாவில் ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.