அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-27 18:45 GMT

ஊட்டி

பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். அரசு அலுவகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்புதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழிக்க வேண்டும். 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும், என்றனர்.

இதில் வட்டத் தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை சுப்பிரமணி, கல்வித்துறை சேர்ந்த கோகுல், மாவட்ட பொருளாளர் அய்யனார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இதேபோன்று குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டாரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்