அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசார இயக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் வேதாரண்யத்தில் இருந்து தொடங்கியது.

Update: 2022-06-21 16:31 GMT

வேதாரண்யம்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் வேதாரண்யத்தில் இருந்து தொடங்கியது.

பிரசார இயக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரசார இயக்கம் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 4 நாட்கள் நடைபெறுகிறது..

அதன்படி அரசு ஊழியர் பிரசார இயக்கம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் பிரசார இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினார். மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங், மாநில துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

மாவட்ட நிர்வாகிகள் மேகநாதன், துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தலைஞாயிறு

ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்துவிட்டு முறையான ஊதிய விகிதத்தில காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 7 முனைகளில் இருந்து 32 ஆயிரம் கிராமங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது.

இதேபோல தலைஞாயிறில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராசு வரவேற்றார் .வட்ட தலைவர் ராமமூர்த்தி பிரசார ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்