அரசு ஊழியர் சங்க கூட்டம்

சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.;

Update:2023-05-11 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் வட்ட கிளை சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தினத்தையொட்டிஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பாசில் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரவி கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அரசுதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வருவாய்துறை, நில அளவை துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்