அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்

Update: 2023-02-11 18:45 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கவேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மூலமாக செயல்படுத்திட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தினர். உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலமானது அவுரித்திடலில் முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ., புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில தலைவர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்ரா நன்றி கூறினார். இதில் 250 பெண் ஊழியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்