உயர்கல்வி படிப்பதற்கான அரசின் வழிகாட்டு பயிற்சி முகாம்

வாணியம்பாடியில் உயர்கல்வி படிப்பதற்கான அரசின் வழிகாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update:2023-10-12 23:12 IST

வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் வழிகாட்டு பயிற்சி முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரி விடுதிகளில் படித்து வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சார்ந்த 10, 12 மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கு அரசின் உதவிகளை எவ்வாறு பெறுவது மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொள்வதற்காகவும் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் ஆற்றலையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்