அரசு பள்ளி தலைமையாசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

பொன்னமராவதி அருகே அரசு பள்ளி தலைமையாசிரியை வீட்டில் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-11 17:37 GMT

பள்ளி தலைமையாசிரியை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முத்துமேகலா (வயது 52). இவர், கீழவேகுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கணவர் இறந்த நிலையில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வரும் இவர், நேற்று  இரவு அதே பகுதியில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

5 பவுன் நகை திருட்டு

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவில் இருந்த 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்